தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பழைய பிளாஸ்டிக்கில் புதிய மொபைல்ஃபோன்! - ஆப்பிள்

கூகுள் நிறுவனம் 2020க்குள் தான் தயாரிக்கும் பொருட்களில் பிளாஸ்டிக்கை உபயோகிக்க முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம்

By

Published : Aug 7, 2019, 6:49 PM IST

தனது தயாரிப்புகளை பயனாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 விழுக்காடுவரை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பயனாளர்களுக்கு மொபைல்ஃபோனைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பாலும் குறைந்தளவு கார்பனை வெளியேற்றும் முறைகளையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் பயனாளர்களுக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் சமன் செய்யப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையத்தில் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஒன்பதில் மூன்று கூகுள் பொருட்களில் 20 முதல் 42 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டுக்குள் தான் தயாரிக்கும் மொபைல்ஃபோன் உள்ளிட்ட சில பொருட்களில் 100 விழுக்காடுவரை பிளாஸ்டிக்கை உபயோகிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் 50 விழுக்காடுவரை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குள் உபயோகப்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது

ABOUT THE AUTHOR

...view details