தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நகை வாங்க சரியான நேரம்! - gold rate decrease

சென்னை: கரோனா காரணமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகிவரும் தங்கத்தின் விலை இன்றும் (ஜூன்.18) குறைந்துள்ளது.

good time to buy gold
good time to buy gold

By

Published : Jun 18, 2021, 9:41 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற-தாழ்வு காணப்பட்டுவருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் (ஜுன்.16) முதல் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று (ஜுன்.17) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 குறைந்து, ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதேபோல இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.35 ஆயிரத்து 640-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.4 ஆயிரத்து 455 ஆக உள்ளது. அதேபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 சரிந்து ரூ.74 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க:தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு!

ABOUT THE AUTHOR

...view details