ஹைதராபாத் : வாரத்தின் முதல் நாள் வர்த்தக தினமான இன்று (ஜூலை 5) தங்கத்தின் விலை சரிந்து விற்பனையாகிறது.
சென்னையை பொறுத்தவரை ஒரு கிராம் 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 834 ஆகவும், 8 கிராம் ரூ.38 ஆயிரத்து 672 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
22 கிராம் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 475 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.35 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனையாகிறது.
அந்த வகையில் நேற்றைய விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது, 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் குறைந்துள்ளது. இதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிந்து காணப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையை விட 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.75 என, ஒரு கிலோ ரூ.75 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களின் விலைகள் மாநில வரி, உள்ளூர் வரி, போக்குவரத்து வரி மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றை கணக்கீல் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.