சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்றம் நிலவிவருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமடைந்து வந்தது. ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ. 25 ஆயிரத்தைத் தாண்டியது. ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தையும் தொட்ட தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம் ரூபாயை கடந்து சாதனை படைத்தது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு! - வெள்ளி
சென்னை: சர்வதேச சந்தையின் எதிரொலியாகத் தங்கம் விலை புது உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கம் விலை
இந்நிலையில் சென்னையில் நேற்று ரூ.27,784-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை, இன்று மேலும் ரூ. 568 உயர்ந்து ரூ. 28,352க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 71 உயர்ந்து ரூ. 3,544க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இதேபோல ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, ரூ.1100 அதிகரித்து ரூ. 46,800க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. தங்கம், வெள்ளி தொடர்ந்து உயர்ந்துவரும் காரணத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.