தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கம் விலை குறைவு! - பங்குச்சந்தை வீழ்ச்சி

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு நான்காயிரத்து 20 ரூபாயாகக் குறைந்துள்ளது.

Gold rate in chennai
Gold rate in chennai

By

Published : Mar 13, 2020, 11:30 AM IST

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துவரும் நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாகக் கடுமையாக உயர்ந்துவந்த தங்கம் விலை, இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.4,020 குறைந்து 32 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 137 ரூபாய் குறைந்து 1,089 ரூபாய் என வர்த்தகமாகிவருகிறது.

இந்தியப் பங்குச்சந்தை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், தங்கம் விலை மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்குத் தங்கம் விலை குறைவு மகிழ்ச்சியளித்தாலும், பங்குச்சந்தையில் தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முதலீட்டார்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: பாதாளம் நோக்கி பங்குச்சந்தை... வரலாறு காணாத வீழ்ச்சி: வர்த்தகம் நிறுத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details