தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கத்தில் முதலீடு செய்யலாமா? - தங்கத்தின் விலை

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 521 என விற்பனையாகிறது.

Gold Rate in Chennai
Gold Rate in Chennai

By

Published : Jul 13, 2021, 10:35 AM IST

சென்னை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.100 வரை அதிகரித்து விற்பனையாகிறது.

சென்னையை பொறுத்தமட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 ஆயிரத்து 521 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.36 ஆயிரத்து 168க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கமும் சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ரூ.4 ஆயிரத்து 881 என விலை நிர்ணயிக்கப்பட்டு, ரூ.39 ஆயிரத்து 48 ஆக உள்ளது.

ஆறுதல் அளிக்கும் விதமாகவெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.73.80 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு கிலோ வெள்ளி 73 ஆயிரத்து 800 ஆக உள்ளது.

தங்கம் வெள்ளி விலைகள் நகரத்துக்கு நகரம் சிறிய வித்தியாசம் காணப்படும். ஏனெனில் தங்கத்தின் விலை, மாநில வரி, உள்ளூர் வரி, போக்குவரத்து வரி மற்றும் இதர வரிகளை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

வரும் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதும், பலர் தங்கத்தில் முதலீடு செய்வதும் விலையேற்றத்துக்கு பொதுவான ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details