சென்னை:ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. உலக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து பீப்பாய் ஒன்று 105.36 டாலருக்கு வர்த்தகமாகிறது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 109 காசுகள் குறைந்து 75.70 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.