சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் விலை ஒரு வாரமாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து 4,620 ரூபாய்க்கும், சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து 36,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - இன்று தங்கம் விலை எவ்வளவு
மூகூர்த்த நாள்கள் நெருங்கும் நேரத்தில் சென்னையில் தங்கத்தின் விலை இன்று(நவ.11) கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 39872ஆக உள்ளது. நேற்று மாலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,432ஆக இருந்தது. வெள்ளியின் விலை 1.30 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ 70.60க்கு விற்பனையாகிறது. அதன்படி 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,600ஆக உள்ளது. மூகூர்த்த நாள்கள் நெருங்கும் நேரத்தில் விலையேற்றம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க:தங்கம் விலை சரிவு... இன்று தங்கம் வாங்கலாமா?