தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதம் உயர்வு! - today gold price

சென்னை: தொடர் உயர்வைச் சந்தித்துவரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.28,944க்கு விற்பனையாகிறது.

தங்க விலை

By

Published : Aug 15, 2019, 3:14 PM IST

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று 400 ரூபாய் வரை விலை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 320 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

29 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். சர்வதேச அளவில் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு அதிகரித்துள்ளதாகவும், தங்க இறக்குமதிக்கான வரி பத்து சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details