தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Q2 காலாண்டு முடிவில் சரிவை சந்தித்த கோத்ரேஜ் நிறுவனம் - Godrej consumer Product faces down in q2

மும்பை: வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கோத்ரேஜ் இந்த ஆண்டு காலாண்டு முடிவில் 28 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது

godrej industries

By

Published : Nov 7, 2019, 7:26 AM IST

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோத்ரேஜ் நிறுவனம் 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டு பூச்சிக்கொல்லிகள், சோப்புகள் போன்ற பொருட்கள்தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் இந்த வருடம் Q2 காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 28 விழுக்காடு சரிவை சந்தித்து 413.88 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்துகாலாண்டு முடிவில் சரிவை சந்தித்தாலும் கோத்ரேஜ் நிறுவனம் தற்போது பங்குசந்தையில் 2.7 விழுக்காடு உயர்வை சந்தித்து ஒரு பங்கின் விலை 741.60 என சென்செக்ஸில் வர்த்தமாகி வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு Q2 காலாண்டு முடிவில் இந்நிறுவனம் 259.72 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் மூன்றாவது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details