பட்ஜெட் ரக விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான கோ ஏர் இன்று (செப்.5) முதல் கூடுதலாக 100 விமானங்களை இயக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமாதாபாத், ஹைதரபாத், கொல்கத்தா, புனே, லக்னோ, நாக்பூர், வாரணாசி, ஜெய்ப்பூர், பாட்னா, ராஞ்சி, கௌஹாத்தி, சன்டிகர், ஸ்ரீநகர், லே, ஜம்மு நகர்களுக்கு இந்த விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைக்கான தேவை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமான சேவைத்துறை மீட்சி பெறும் என நம்புவதாக கோ ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கௌஷிக் கோனா தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டு விமான சேவையின் அளவை 45 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்தி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் இம்மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய வங்கிச் செயலிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ. மட்டும் தான் டாப்