தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ராணுவ செலவு - மூன்றாம் இடத்தில் இந்தியா! - USA military spending

லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ஆம் ஆண்டு ராணுவ செலவுகள் 3.6 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் ராணுவ செலவுகளில் முதன்முறையாகச் சீனா, இந்தியா முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Global military spending
Global military spending

By

Published : Apr 27, 2020, 1:04 PM IST

Updated : Apr 27, 2020, 1:13 PM IST

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் ராணுவ செலவினம் குறித்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டில் மட்டும் ராணுவ செலவுகள் 3.6 விழுக்காடு உயர்ந்து சுமார் ஆயிரத்து 917 பில்லியன் டாலர்களாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ஆம் ஆண்டு ராணுவ செலவுகள் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மொத்த சர்வதேச ஜிடிபியில் 2.2 விழுக்காடாகும். அதாவது உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 249 அமெரிக்க டாலர்கள் ராணுவத்திற்குச் செலவிடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ராணுவ செலவினம் 5.3 விழுக்காடு உயர்ந்து 732 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகையில், கடந்த ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் உள்ள வேறுபாடு மட்டுமே ஜெர்மனி நாட்டின் மொத்த ராணுவ செலவினமாகும். இதுதவிர உலக அளவில் செய்யப்படும் ராணுவ செலவினத்தில் அமெரிக்கா மட்டும் 38 விழுக்காடு செய்வதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவும் இந்தியாவும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. இரண்டு ஆசிய நாடுகள் ராணுவ செலவினங்களுக்குக்கானப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.

சீனாவின் ராணுவ செலவினம் 5.1 விழுக்காடு அதிகரித்து 261 பில்லியின் அமெரிக்க டாலர்களாகவும் இந்தியாவின் செலவினம் 6.8 விழுக்காடு அதிகரித்து 71.1 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சிக்கல் தொடர்வதே இந்தியா ராணுவ செலவுகள் அதிகரிக்கக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சவுதி அரேபியா மூறையே நான்கு, ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன. இந்த ஐந்து நாடுகளின் ராணுவ செலவினங்கள் மட்டும் சர்வதேச அளவில் செய்யப்படும் ராணுவ செலவுகளில் 62 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ராணுவ செலவினம் என்பது 7.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பின் ராணுவ செலவினம் என்பது இந்தாண்டில்தான் அதிகமாக உள்ளது.

அமெரிக்க நாடுகள் 1.4 விழுக்காடும் ஆப்ரிக்கா நாடுகள் 1.6 விழுக்காடும் ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் 1.7 விழுக்காடும் மத்திய கிழக்கு நாடுகள் 4.5 விழுக்காடும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றன.

இதையும் படிங்க: 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை!

Last Updated : Apr 27, 2020, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details