நாட்டின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்ய சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் 1.22 விழுக்காடு பங்குகளை ரூ.5,512.5 கோடி ரூபாய்க்கு வாங்க ஜி.ஐ.சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் நான்கு நிறுவனங்கள் ரிலையன்ஸின் சில்லரை வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. முன்னதாக, ஜென்ரல் அட்லான்டிக் நிறுவனம் ரூ.3,675 கோடிக்கும், சில்வர் லேக் நிறுவனம் ரூ.1,875 கோடிக்கும் முபாடாலா நிறுவனம் ரூ.6,247 கோடிக்கும் ரிலையன்சில் முதலீடு செய்துள்ளன. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.4.285 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.