2019-2020ஆம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2 விழுக்காடாக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை, மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1 விழுக்காடாக உள்ளது. மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது; கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று துறை சார் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'நான்காவது காலாண்டிற்கான ஜிடிபி நான்கு விழுக்காடாக இருக்கும் என்று நான் கணிப்பு வெளியிட்டு இருந்தேன். ஆனால், இப்போது அதை விட ஜிடிபி குறைவாக இருக்கிறது.