தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2019, 11:02 PM IST

ETV Bharat / business

வரும் ஜனவரி முதல் ஆன்லைன் பரிவர்தனைக்கு கட்டணமில்லை ரிசர்வ் வங்கி

மும்பை: டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வரும் ஜனவரி முதல் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

neft

நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வர்த்தகம், பணபரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பயன்பாடானது அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த ஓராண்டில் 96 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும், நெப்ட்(NEFT) மற்றும் யுபிஐ(UPI) பணபரிவரத்தனைகளின் எண்ணிக்கை 252 கோடி மற்றும் 874 கோடியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடிக்கையால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் பலனை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பின் நெப்ட்(NEFT) ஆன்லைன் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளான நவம்பர் 8ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!

ABOUT THE AUTHOR

...view details