ஹைதராபாத்: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு கார் உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் தனது உற்பத்தி ஆலைகளை மூடவுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வந்த நிறுவனத்திற்கு, கரோனா ஊரடங்கும் எமனாக அமைந்தது. விற்பனைகள் குறைந்தபோதிலும், வாகனங்களுக்கான சேவையையில் நிறுவனம் எந்த தொய்வும் காட்டியதில்லை.
ஜெர்மனி, ஸ்பெயின் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு கார் ஆலை மூடுவதாக தகவல் வெளியாகியுள்ளதால், சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.