கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதேபோல ஆன்லைனில் உணவு ஆர்டர் முறைகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆன்லைனில் உணவு ஆர்டர் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆன்லைன் உணவு ஆர்டர்கள் கரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீபீந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் உணவு ஆர்டர்கள் கரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.