கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளான பொருளாதாரத்தைச் சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தைக் களைய, தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு நிதித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு வர்த்தக நடவடிக்கையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், வணிக நடவடிக்கைகள் மீண்டெழுவதற்கு ரிசர்வ் வங்கி மூலம் வங்கிகளுக்கு நிதி செலுத்தப்பட்டு, பணப்புழக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.