நிதிச் சிக்கலிலிருந்து யெஸ் வங்கியை மீட்டெடுக்க அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் வைப்புத்தொகைக்கு பாதிப்பு ஏற்படுமோ என வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது - நிர்மலா சீதாராமன் - யெஸ் வங்கி
டெல்லி: யெஸ் வங்கிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாகத்தான் உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
FM Nirmala Sitharaman on Yes bank
அவர்களை ஊக்குவிக்கும்விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும், விரைவில் நிலைமையை சரிசெய்ய நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யெஸ் வங்கி பிரச்சனைக்கு 30 நாள்களில் தீர்வு - சக்திகாந்த தாஸ்
Last Updated : Mar 6, 2020, 2:34 PM IST