கரோனா வைரஸ் நோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கான துறை மட்டும் தொடர்ந்து இயங்கிவருகிறது. இதனிடையே, அனைத்து மட்டத்திலும் பணப்புழக்கத்தை உறுதி செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கி அலுவலர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். பிறகு பேசிய அவர், "அரசு மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அலுவலர்களிடம் விரிவாக ஆலோசித்தேன். ஊரடங்கின்போது அவர்கள் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகள் எனக்கு ஊக்கம் அளித்தது" என்றார்.