தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆயுத பூஜை: பூ வரத்து அதிகம்! - பொரி விலை

கரோனா எதிரொலியாக ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாள்களில் கோயம்பேடு மலர்ச் சந்தையில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

பூக்கள் வரத்து அதிகம்
பூக்கள் வரத்து அதிகம்

By

Published : Oct 14, 2021, 6:35 AM IST

Updated : Oct 14, 2021, 6:43 AM IST

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாள்களில் பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பூ, பூசணிக்காய், பொரி உள்ளிட்டவற்றைப் படைத்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது, நாளை விஜயதசமி பண்டிகை வருவதைத் தொடர்ந்து, கோயம்பேடு பூச்சந்தையில் வியாபாரிகள் நல்ல விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால், விலையில் பெரிய அளவு ஏற்றம் இல்லை எனக் கோயம்பேடு வியாபாரிகள் கூறுகிறார்கள். இது குறித்து பூ வியாபாரி பாரதி என்பவர் பேசுகையில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை சற்று பரவாயில்லை. ஆனால், கரோனாவால் அலுவலகம் சார்ந்த பூஜைகளுக்கு பூ விற்பனை இல்லை. அவர்கள் பெரிய அளவு தற்போது வாங்குவது இல்லை எனத் தெரிவித்தார்.

பூக்கள் விலை

  • சாமந்தி மாலை 100 ரூபாய் முதல் 500 ரூபாய்
  • சாமந்தி பூ கிலோ 60 ரூபாய் முதல் 200 ரூபாய்
  • ரோஜா பூ கிலோ 150 முதல் 350 ரூபாய்
  • மல்லி பூ கிலோ 160 ரூபாய்

பழங்கள் விலை

  • சாத்துக்குடி 30 ரூபாய் முதல் 60 ரூபாய்
  • மாதுளம் பழம் 120 முதல் 150 ரூபாய்
  • ஆரஞ்சு பழம் 35 முதல் 50 ரூபாய்
  • ஆப்பிள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய்
  • வாழைப்பழம் தார் 150 முதல் 500 ரூபாய்
  • ஒரு சீப்பு 40 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது

இதரப் பொருள்கள்

  • பூசணிக்காய் 60 ரூபாய் முதல் 150 ரூபாய்
  • தோரணம் ஒன்றுக்கு - 3 ரூபாய்
  • வாழைக்கன்று - 10 ரூபாய்
  • வாழைக்கன்றுகள் கட்டு 50 முதல் 100 ரூபாய்
  • மொத்த வியபாரம் பொரி மூட்டை - ரூ.500 (சிறியது) | ரூ.600 ரூபாய் (பெரியது)

இதையும் படிங்க:ரூ.538 கோடி மதிப்பிலான திட்ட ஒப்பந்தத்தை வென்ற டாடா பவர்

Last Updated : Oct 14, 2021, 6:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details