கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன.
பல ஆராயச்சி மையங்கள், சோஷியல் டிஸ்டன்சிங் என்றழைக்கப்படும் சமூக விலகலால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும் என அறிவித்துள்ளன. அதனையே மத்திய அரசும் வலியுறுத்துவதால், 21 நாட்களுக்கு நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தலால் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
மேலும் 21 நாட்களுக்கு தங்களது சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மற்றொரு ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், அத்தியாவசிய பொருட்களை மட்டும் வழங்குவோம் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனாவால் வரிமானவரி செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு