இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், சமூக நலன் கருதியும், சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படாத வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மின்சக்தி வாகனம் மூலம் டெலிவரி: ஃபிளிப்கார்ட் திட்டம்!
பெங்களூரு: ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை, மின் வாகனம் மூலம் டெலிவரி செய்ய ஃபிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில் புதிய முயற்சியாக, ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் மூலம் டெலிவரி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 2020 மார்ச் மாதத்துக்குள் டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் 40 சதவீத டீசல்/பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை இயக்க முடிவெடுத்துள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 160 மின் வாகனங்களை இயக்கவுள்ளதாகவும் ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது. இதற்காக, கடந்த ஆறு மாதமாக மின் வாகனங்களைக் கொண்டு அந்நிறுவனம் சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அமிதேஷ் ஜா கூறுகையில், "மின் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை நிலையாக வைக்க உதவும். இதனால், நிறுவனத்தின் செலவு பெருமளவு குறையும். இந்தியாவில் மின் வாகனங்கள் பயன்படுத்த மற்றவர்களையம் உக்குவிக்கும்" என்றார்.