அமேசான் நிறுவனத்தை அடுத்து தற்போது பிளிப்கார்ட் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் தீவிரமாகக் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இரு முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் திகழ்ந்துவருகிறது.
2020ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக, 2025ஆம் ஆண்டுக்குள் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களை டெலிவரி வாகனங்களாக களமிறக்கவுள்ளதாக அமேசான் அறிவித்தது. இதையடுத்து, முதற்கட்டமாக 100 மஹேந்திரா ட்ரியோ ஜோர் மூன்று சக்கர வாகனங்களை அமேசான் டெலிவரிக்கு அனுப்பியது.
இதையடுத்து, பிளிப்கார்ட் நிறுவனமும் தனது சகப் போட்டியாளருக்கு பதிலளிக்கும் விதமாக 25,000 எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. டெல்லி, பெங்களூரு, ஹைதரபாத், கொல்கத்தா, கௌஹாத்தி, புனே ஆகிய பகுதிகளில் இந்த டெலிவரி வாகனங்களை களமிறக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த 25,000 என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டவுள்ளதாகவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக், பியஜியோ ஆகிய நிறுவனங்களுடன் பிளிப்கார்ட் கைகோர்த்துள்ளது.
இதையும் படிங்க:உற்பத்திசார் திட்டங்கள் இந்தியாவை புதுமையின் பாதையில் கொண்டுசெல்லும்: அமிதாப் கந்த்