கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகைப் பொருள்கள் உட்பட அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் முறையை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. சோதனை முறையில் இத்திட்டம் தற்போது ஹைதராபாத்தில் மட்டும் செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிளிப்கார்ட் நிர்வாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, "கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு இந்தச் சேவையை சோதனை முறையில் தொடங்கியுள்ளோம்.