தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மாணவர்களுக்காக பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் - ப்ளிப்கார்ட் தற்போதைய செய்தி

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சியை (internship) பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Flipkart
Flipkart

By

Published : Oct 10, 2020, 4:17 PM IST

இந்தியாவில் அக்டோபர் இறுதி வாரம் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகைக் காலமாக அறியப்படுகிறது. ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 40 விழுக்காடு விற்பனை இந்தக் காலகட்டத்தில் மட்டும் நடைபெறுகிறது.

இந்தக் காலகட்டத்தில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். பண்டிகைக் காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்பதால் ஆண்டுதோறும் தற்காலிக ஊழியர்களை இவ்விரு நிறுவனங்களும் பணியமர்த்தும்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சியை (internship) பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 45 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் மாணவர்களுக்கு விநியோக சங்கிலி குறித்த முக்கியத் திறன்கள் கற்று தரப்படும் என்றும் பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே போல் நடைபெற்ற பயிற்சியில் சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்றும், இந்த ஆண்டு சுமார் 21 நகரங்களில் இந்தப் பயிற்சி நடைபெறும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் விற்பனை வரும் 16ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details