தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிக் பில்லியன் டே விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி சலுகைகள்!

டெல்லி: பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய பொருளை ஆன்லைனில் வாங்க ஏதுவாக 17 முன்னணி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Flipkart
Flipkart

By

Published : Oct 14, 2020, 10:07 PM IST

இந்தியாவில் அக்டோபர் இறுதி வாரம் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகைக் காலமாக அறியப்படுகிறது. ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 40 விழுக்காடு விற்பனை இந்தக் காலகட்டத்தில் மட்டும் நடைபெறுகிறது.

இந்தக் காலகட்டத்தில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் விற்பனை வரும் 16ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 2.5 கோடிக்கும் அதிகமான பொருள்களுக்கு பல அதிரடி ஆப்பர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஎம்ஐ முறையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விரும்பிய பொருள்களை வாங்க பல வங்கிகளுடனும் பிளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒவ்வொரு இந்தியரும் தான் விரும்பிய பொருளை ஆன்லைனில் வாங்க ஏதுவாக பிளிப்கார்ட் நிறுவனம் 17 முன்னணி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில் பிளிப்கார்ட்டிலுள்ள ஏழு கோடி வாடிக்கையாளர்களுக்கும் பெரிதும் உதவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருள்களை வாங்கும் நபர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஃபெடரல் வங்கியின் வாடிக்கையாளர்களும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ மூலம் பொருள்களை வாங்க கடனைப் பெறலாம்.

இதையும் படிங்க: தொடர்ந்து சரியும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து!

ABOUT THE AUTHOR

...view details