ஒவ்வொரு நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையைப் பொருத்து, சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் மதிப்பீடுகளை அளிக்கும். சர்வதேச நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு கடன்களை அளிக்க இந்த மதிப்பீடுகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதனால் இந்த மதிப்பீடுகள் குறையாமல் அரசு கவனித்துக்கொள்ளும்.
இருப்பினும், தற்போது கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் பெருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தற்போது, ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள தற்சார்பு இந்தியா என்ற பெயரில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த ஊக்குவிப்பு திட்டம் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், சர்வதேச ரேட்டிங் நிறுவனமான ஃபிட்ச் நிறுவனம், foreign-currency issuer default rating (IDR) எனப்படும் இந்திய ரூபாயின் மதிப்பீட்டை 'நிலையானது' என்றதிலிருது 'நெகட்டிவ்' என்ற நிலைக்கு தரமிறக்கியுள்ளது.