தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

புரட்டாசி மாதம்: மீன்கள் விலை குறைந்தும் வெறிச்சோடிய காஞ்சி மீன் சந்தை

புரட்டாசி மாதம் பிறந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் வாங்க பெரும்பாலானோர் வராததால் காஞ்சிபுரம் மீன் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

fish market rate in kanchipuram
fish market rate in kanchipuram

By

Published : Sep 19, 2021, 3:56 PM IST

காஞ்சிபுரம்: புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மீன் சந்தையில் எப்போதும் மீன் வாங்க கூட்டம் அலை மோதும்.

ஆனால், புரட்டாசி மாதம் என்பதால் ஒரு சிலர் மட்டுமே மீன் வாங்க வந்து சென்ற நிலையில், பெரும்பாலானோர் வரவில்லை. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது மீன்களின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரம் சீலா மீன் ஒரு கிலோ ரூ.350-க்கு விற்ற நிலையில், இந்த வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கோலா மீன் 200 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், சங்கரா 300 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கும், வஞ்ஜரம் 600 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கும், கடம்பா 300 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கும் விலை குறைத்து விற்பனை செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மீன்களின் விலை குறைந்தாலும், புரட்டாசி மாதம் என்பதால் மீன் வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. இந்த புரட்டாசி மாதம் முழுவதும் பொதுமக்கள் இறைச்சியை பெரிதும் விரும்பமாட்டார்கள். எனவே மீன், இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாகவே இருக்கும் என வியாபாரிகள் கூறினர்.

இதையும் படிங்க:விமானப் போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு

ABOUT THE AUTHOR

...view details