தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2020, 7:00 PM IST

ETV Bharat / business

கோவிட்-19 தாக்கம்: நாட்டின் நிதி பற்றாக்குறை வெகுவாக உயர்வு

2020 நவம்பர் மாத இறுதியில் நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ. 10.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Fiscal deficit
Fiscal deficit

நாட்டின் நிதி நிலவரம் குறித்த முக்கிய புள்ளிவிவரத்தை சி.ஜி.ஏ. (Controller General of Accounts (CGA)) வெளியிட்டுள்ளது. 2020 நவம்பர் மாத இறுதியில் நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.10.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் 135.1 விழுக்காடு உயர்வை சந்தித்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் இதன் மதிப்பீடானது 114.8 விழுக்காடாக இருந்தது. கரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், நாட்டின் வருவாய் மற்றும் செலவீனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் மொத்த வருவாய் நவம்பர் மாத இறுதிவரை ரூ.8.30 லட்சம் கோடியாக உள்ளது. அதேவேளை, அரசின் மொத்த செலவீனம் ரூ.19.06 லட்சம் கோடியாக உள்ளது.

கோவிட்-19 தாக்கம் காரணமாக அரசின் வரி வருவாய் கடந்தாண்டை காட்டிலும் சுமார் மூன்று விழுக்காடு சரிவை கண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:சந்தை நிலவரம்: 2020ஆம் ஆண்டில் 15 விழுக்காடு லாபம் கண்ட பங்குச்சந்தைகள்

ABOUT THE AUTHOR

...view details