2019 டிசம்பர் மாத வரையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.56 விழுக்காடாக உள்ளது. வரவு ரூ .11.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் செலவினங்கள் 21.09 லட்சம் கோடியாக உள்ளன. 2020 மார்ச் 31 வரை திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை 3.8 விழுக்காடாக உள்ளது.
மொத்த வரி வசூல் ரூ. 3.83 லட்சம் கோடி (பட்ஜெட் மதிப்பீட்டில் 53 சதவீதம்) ஆகும். மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ. 9.04 லட்சம் கோடியாக இருந்தது.