தமிழ்நாடு

tamil nadu

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஓராண்டு நிறுத்தம்

By

Published : Apr 23, 2020, 3:44 PM IST

டெல்லி: கரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக ஓராண்டு காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Finance
Finance

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை அடுத்த வருடம் ஜூலை மாதம் வரை நிறுத்திவைப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கரோனா பாதிப்பு சூழலில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் ஜூலை 2020, ஜனவரி 2021ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும், தற்போது அறிவிக்கப்பட்ட 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ரூ.37,530 கோடி மிச்சப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அடிப்படையிலேயே மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும். எனவே இந்த அறிவிப்பின் மூலம் மொத்தமாக மத்திய மாநில அரசு நிதியில் 1.20 லட்சம் கோடி சேமிக்கப்படும் என நிதித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'வரும் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.8% ஆக சரியும்'

ABOUT THE AUTHOR

...view details