தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வரும் 31ஆம் தேதிக்குள் இதை மறக்காம செஞ்சிடுங்க! - Pan aadhar link

2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மூன்று விஷயங்களை மறக்காமல் செய்துவிடுங்கள்.

financial
financial

By

Published : Dec 29, 2019, 8:24 PM IST

இந்த ஆண்டு இறுதிக்குள் மறக்காமல் முடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

பான்-ஆதார் இணைப்பு

பான் கார்டை (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 31ஆம் தேதிக்குள் வருமானவரி நிரந்தர கணக்கு எண் - ஆதார் இணைப்பு மேற்கொள்ளவில்லை என்றால் பான் கார்டு எனப்படும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல்

ஆண்டு வருமானவரித் தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, தாமதமாக தாக்கல் செய்தாலோ அதற்கான அபராதத் தொகை இருந்தாலோ அதை வரும் 31ஆம் தேதியுடன் செய்து முடித்துவிடவும். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செய்தால் அபராதத் தொகை ஐந்தாயிரம், இல்லையேல் பத்தாயிரமாகக் கட்ட வேண்டும்.

ஏடிஎம் டெபிட் அட்டை புதுப்பித்தல்

பாரத ஸ்டேட் வங்கியின் பற்று அட்டை (ஏ.டி.எம். டெபிட் கார்டு) காந்தக் கோடு அட்டையாக இருந்தால், அதை 31ஆம் தேதிக்குள் ஈ.எம்.வி. சிப் அட்டையாக மாற்ற வேண்டும். இல்லையேல் அது பயனற்றதாக மாறிவிடும். எனவே மறக்காமல் மாற்றிவிடுங்கள்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ABOUT THE AUTHOR

...view details