தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2019, 3:31 PM IST

Updated : Dec 16, 2019, 4:43 PM IST

ETV Bharat / business

பட்ஜெட் குறித்து தொழில்துறை பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

டெல்லி: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது

Nirmala
Nirmala

தொழில்துறை பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்குதலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று தொடங்கினார்.

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனையை ஒரு வாரத்திற்கு மத்திய அரசு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், நிதிச்சேவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஜியோஜிட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஜயகுமார், இந்திய பொருளாதாரம் நாளுக்குநாள் சரிவை நோக்கி பயணிக்கிறது, இதனை சரிசெய்ய மிகப்பெரிய அளவில் கார்பொரேட் வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.


மேலும் நடைபெறஉள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறை பிரதிநிதிகள், விவசாயத் துறைகளைச் சேர்ந்தவர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்குகொள்வார்கள் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் - வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவு

Last Updated : Dec 16, 2019, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details