கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு இடர்பாடுகள் உருவாகியுள்ள நிலையில், அது பொருளாதார நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு வருமானவரித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2019-20ஆம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு வரும் நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 31ஆம் தேதிவரை இருந்த காலக்கெடுவை தற்போது மேலும் நான்கு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.