நிதிநிலை அறிக்கையின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தற்போது பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதென்பது இந்த அரசுக்கு மிகப் பெரிய சவாலான காரியம். மேலும் வேலை வாய்ப்பின்மையால் அதிக அளவில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
45 வருடத்திற்கு முன்பு வேலையின்மை மோசமாக இருந்ததுபோல தற்போது உள்ளது. எனவே அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேவை எழுந்துள்ளதாக கூறினார்.
மேலும் அவர், இந்த நிதி ஆண்டில் பொதுத்துறையில் அதிக அளவு முதலீடு இருக்காலாம் எனவும், இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்க அரசு வழிவகை செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிதி நிலை அறிக்கையில் வரி குறைப்பு, நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். இதன் காரணமாக அதிக அளவிலான முதலீடுகளை தொழிற்சாலைகள் மேற்கொள்ளும். அதனோடு ஜி.எஸ்.டி போன்றவையால் தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதனால் இந்த நிதி அறிக்கையில் ஜி.எஸ்.டி எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தனிப்பெரும்பான்மையோடு உள்ளதால் பொருளாதாரம் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் அனுபவம் உள்ளதால், அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கும் எனவும், அவர் மூலம் மாற்றம் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது. தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்த்தி தொழிற்சாலைகள் தொடங்கும் வழிகளை எளிமைப்படுத்தினால் அதிக அளவிலான முதலீடுகளை எதிர்பார்க்கலாம். இதனை புதிய நிதி அமைச்சர் செய்வார் என்று நம்புவதாக ஃபிக்கி அமைப்பைச் சேர்ந்த விக்ரம் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத்துக்கு அளித்த முழுப் பேட்டி