'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2020' கருத்தரங்கு நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “கோவிட்-19 காலகட்டத்திலும், இந்தியா அதிகளவிலான அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையானது ஏழு விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியா அந்நிய நேரடி முதலீட்டை ஒரு போதும் எதிர்த்ததில்லை.
புதிய சிந்தனைகளுக்கு இந்தியா என்றும் வரவேற்பு அளிக்கும். அந்நிய முதலீட்டுக்கு வரவேற்பு அளிக்கும் அதேவேளை, நாட்டின் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது” என அவர் கூறினார்.
மேலும், அவர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பலர் உள்நோக்கம் கொண்டு தவறான வழியில் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது எனவும் தீவிரவாத சக்திகள் இதை தங்கள் மறைமுக ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் மத்திய அரசு சீனாவைச் சேர்ந்த பல்வேறு செயலிகளை தேசப் பாதுகாப்பைக் காரணம்காட்டி தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவை - அதிரடி காட்டும் அம்பானி