ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசினார். அதில் மாற்று எரிசக்தி குறித்து முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் பேசியதாவது, "நாட்டில் எத்தனால் வகை பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமான முன்னெடுப்புகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அமெரிக்கா, பிரேசில், கனடா போல விரைவில் வாகன ஓட்டிகளுக்கு 100 விழுக்காடு எத்தனால் எரிபொருள் பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க முயற்சி செய்துவருகிறது.
எத்தனால் உற்பத்திக்கு கரும்பு விவசாயம்தான் அடிப்படை என்பதால், கோதுமை, நெல் போல இனி விவசாயிகள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளையும் உற்பத்தி செய்யலாம்.
ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், ஓடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர். இதை சூப்பர் பாசனத் திட்டத்தின் மூலம் தான் சீர் செய்ய முடியும். உள்நாட்டு நீர்பிரச்னைகளுடன், சர்வதேச பாசன பிரச்சனைகளையும் தீர்ப்பதில் அரசு முனைப்பு காட்டிவருகிறது" என்றார்.
இதையும் படிங்க:கோவிட்-19 இரண்டாம் அலை காலத்தில் கார்ப்பரேட்கள் ரூ.1,600 கோடி உதவி