ஆட்டோமொபைல் துறை கரோனா அச்சத்தால் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு, குறு நிறுவனங்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார்.
அதன்படி எம்.எஸ்.எம்.இ பட்டியலில் அடங்கிய நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல், 3 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல் மேலும் பல சலுகைகளை அவர் வழங்கியதால், ஆட்டோமொபைல் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தை எம்.எஸ்.எம்.இ பட்டியலில் சேர்க்கவேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்ஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆட்டோமொபைல் துறை விரைவில் மேம்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ‘புலம்பெயர்ந்தோரின் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’ - பிரியங்கா காந்தி