தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜியோவில் ஃபேஸ்புக் முதலீடு செய்ய உண்மையான காரணம் இதுதானா?

ஜியோவில் ஃபேஸ்புக் முதலீடு செய்திருப்பதன் மூலம் ரிலையன்ஸ் விரைவிலேயே கடனில்லாத நிறுவனமாக மாற வாய்ப்புள்ளதாக கிரேடிட் சூயிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook
Facebook

By

Published : Apr 27, 2020, 4:05 PM IST

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, தனது நிறுவனத்தைக் கடன் இல்லாத நிறுவனமாக மாற்றுவதே இலக்கு என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற்போல் ஃபேஸ்புக் நிறுவனமும் ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு நிறுவனமானஜியோவில் 9.9 விழுக்காடு பங்குகளை ரூ. 43,574 கோடிக்கு (5.7 பில்லியன் டாலர்) வழங்குவதாக அறிவித்தது.

ஃபேஸ்புக்கின் இந்த அறிவிப்பு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் அதிகரித்தன. இதன்மூலம் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளி ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த முதலீடு ரிலையன்ஸ் நிறுவனத்தை மார்ச் 2021ஆம் ஆண்டிற்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்றும் என்று கிரேடிட் சூயிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப வசதிகளையும் ரிலையன்ஸ் நிறுவனத்தால் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன்மூலம் மிக எளிதில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தியாவின் 120 கோடி மக்களைச் சென்றடைய முடியும்.

சமீபத்தில் ரிலையன்ஸின் இணையவழி மளிகைப் பொருள்களை விற்கும் தளமான ஜியோமார்ட் தனது சேவையை வாட்ஸ்அப் செயலி மூலம் விரிவுபடுத்தியது.

அதேபோல பல வி.ஆர். சாதனங்களையும் (மெய்நிகர் சாதனங்கள்) காணொலி அழைப்பு வசதிகளையும் ஃபேஸ்புக் வழங்கிவருகிறது. அதற்கான டேட்டாவை தற்போது ஜியோவிலிருந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ராணுவ செலவு - மூன்றாம் இடத்தில் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details