உலகின் மிகப்பெரும் சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் கடந்த வருடம் ஜூன் மாதம் முதன்முதலில் ’மீஷோ’ எனப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்தது. மீஷோ, தொழில் முனைவோர், குறிப்பாக பெண்கள், தங்கள் வணிகத்தை ஆன்லைன் மூலம் பெருக்கிக்கொள்ள உதவும் ஒரு தளம் ஆகும்.
ஃபேஸ்புக் நிறுவனம் மீஷோவில் முதலீடு செய்தத் தொகை குறித்து வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், 20 முதல் 30 மில்லியன் டாலர்கள்வரை முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியாவின் வளர்ந்துவரும் கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான ’அன்அகடமி’ க்கு நிதி அளித்தது. மேலும் மற்றொரு கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான ’பைஜூஸ்’ இல் ஃபேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான சான் ஜூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்வின் (CZI) பங்களிப்பு உள்ளது.