தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் - பேஸ்புக் புதுத்திட்டம்

இந்தியாவின் சிறுகுறு தொழில்முனைவோருக்கு ஐந்து முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க பேஸ்புக் நிறுவனம் புதியத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

Facebook
Facebook

By

Published : Aug 23, 2021, 12:48 PM IST

இந்தியாவின் சிறுகுறு தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக பேஸ்புக் இந்தியா நிறுவனம் புதிய கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் உள்ள 200 நகரங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் அறிமுகமாகிறது.

இன்டிபை என்ற அமைப்புடன் சேர்ந்து இந்தத் திட்டத்தை பேஸ்புக் இந்தியா முன்னெடுத்துள்ளது. இதை பேஸ்புக் இந்தியா துணைத் தலைவர் அஜித் மோகன் தொடங்கிவைத்தார்.

ஐந்து முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன்

இந்த் திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில்முனைவோருக்கு ஐந்து முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான வட்டி ஆண்டுக்கு 17-20 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கடனுக்கான ஒப்புதல் கிடைத்த ஐந்து நாள்களிலேயே தொழில்முனைவோர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்.

சுமார் 20 கோடி வணிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் இந்தியர்களே என பேஸ்புக் இந்தியா துணைத் தலைவர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார்.

எனவே தொழில்முனைவோரின் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தக் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என பேஸ்புக் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details