நாட்டில் கரோனா பாதிப்பு பரவால் தொடங்கியதையடுத்து முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை அத்தியவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து இவற்றை பதுக்கவோ, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவோ தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சகச் செயலர் லீனா நந்தன், கடந்த ஜூன் 30ஆம் தேதிவரை முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அத்தியவசிய பொருட்களாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த நூறு நாட்களில் இரு பொருட்களும் தேவையான உற்பத்தி செய்துள்ள நிலையில் தற்போது போதுமான இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து விலக்கியுள்ளோம். மாநில அரசுகளுடன் ஆலோசித்தப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.