பெட்ரோலியம், பொறியியல், ரசாயனம், அணிகலன் உள்ளிட்ட துறைகள் சரிவுகண்ட நிலையில், நாட்டின் ஏற்றுமதி 8.74 விழுக்காடு குறைந்து 23.52 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான வர்த்தகப் பற்றாக்குறை 9.87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 8.74 விழுக்காடு சரிவு
டெல்லி: ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 17.76 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இறக்குமதி 33.55 விழுக்காடு சுருங்கியுள்ளது.
அதேபோல், இறக்குமதியானது 13.32 விழுக்காடு குறைந்து 9.87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த ஆண்டு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 17.76 விழுக்காடு சரிவை சந்தித்துள்ள நிலையில், இறக்குமதி 33.55 விழுக்காடு சுருங்கியுள்ளது.
நடப்பாண்டு முதல் எட்டு மாதத்திற்கு, வர்த்தகப் பற்றாக்குறையானது 43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கடந்தாண்டு இது 113.42 பில்லியன் டாலர்களாக இருந்தது. நவம்பர் மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 43.36 விழுக்காடு குறைந்துள்ளது.