தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அம்பேத்கர் ஜெயந்தி: பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை - அம்பேத்கர் ஜெயந்தி

மும்பை: பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Equities market closed on account of Ambedkar Jayanti Ambedkar Jayanti Stock market BSE NSE Nifty sensex business news அம்பேத்கர் ஜெயந்தி பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை
Equities market closed on account of Ambedkar Jayanti Ambedkar Jayanti Stock market BSE NSE Nifty sensex business news அம்பேத்கர் ஜெயந்தி பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

By

Published : Apr 14, 2020, 11:54 AM IST

நாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சர் டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
இதேபோல் உலோகம் மற்றும் பொன் உள்ளிட்ட மொத்த பொருள்கள் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் அந்நிய செலாவணி உள்ளிட்ட வர்த்தகங்களும் நடைபெறவில்லை.

திங்கட்கிழமை வர்த்தக நிறைவின்போது, மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 470 புள்ளிகள் (1.51 விழுக்காடு) குறைந்து 30,690 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50.11 புள்ளிகள் (1.3 விழுக்காடு) சரிந்து 8,994 ஆகவும் வர்த்தகம் நிறைவுற்றது.

இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் ஆசியாவின் சில குறிப்பிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்தன. இருப்பினும், உலகளாவிய மந்தநிலை குறித்து முதலீட்டாளர்களின் கவலை காரணமாக முதலீடு மிதமான அளவில் காணப்பட்டது.
அந்த வகையில் சீனப் பங்குகள் ப்ளூ-சிப் குறியீட்டுடன் 0.7 சதவீதம் உயர்ந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி ஆகியவை தலா 1.4 விழுக்காடு அதிகரித்தன.

ஹாங்காங்கின் ஹேங் செங் 0.2 சதவீதம் உயர்ந்தது. எனினும் ஜப்பானிய பங்குகள் சரிவை சந்தித்தன.

ABOUT THE AUTHOR

...view details