தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார் - ஏர் இந்தியா தனியார்மயம் வரைவு

புதுடெல்லி: பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Air India
Air India

By

Published : Jan 7, 2020, 4:43 PM IST

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுக்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்திற்குள், விற்பனை ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க அதன் நிர்வாகக்குழு அரசுடன் சேர்ந்து கடந்த வருடம் முடிவெடுத்தது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்ஷ்தீப் பூரி உள்ளிட்டோர் கொண்ட அமைச்சரவை குழு கடந்த வருடம் அமைக்கப்பட்டது.

மத்தியில் பாஜக அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தபின், நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம், பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காட்டுத்தீயில் காயமடைந்த 90 ஆயிரம் விலங்குகளைக் காப்பாற்றிய ஸ்டீவ் இர்வின் குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details