நாட்டின் உற்பத்தித் துறை தொடர்பான முக்கிய புள்ளிவிவரத்தை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் நாட்டின் எட்டு முக்கிய உற்பத்தித் துறைகள் 8.5 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளன. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எட்டுத் துறைகளும் 0.2 விழுக்காடு சரிவைச் சந்தித்தன.
இந்த எட்டுத் துறைகளும் தொடர்ந்து ஆறாவது மாதமாக சரிவைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி, உரம் ஆகியவற்றைத் தவிர ஏனைய ஆறு துறைகளான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு நிறுவனம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி நெகடிவில் சென்றுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.