போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நரேஷ் ஜெயின் என்பவரை அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலர்கள் கைது செய்துள்ளனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தின் மூலம் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 554 போலி நிறுவனங்களின் 940 வங்கிக் கணக்குகளின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த மோசடியில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. இரண்டு பண மோசடி வழக்குகளில், ஜெயின் மற்றும் அவரின் உதவியாளர்களை விசாரணை செய்துவருகிறோம்" என்றார்.