இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சுருக்கம் கண்ட இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டு, வெளிநாட்டு தேவையின் காரணமாக மீண்டு எழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் அலைக்குப்பின் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கை மீட்சி கண்டுள்ளது.