தமிழ்நாடு

tamil nadu

பொருளாதார மந்த நிலையை சரி செய்ய சாதாரண மனிதனின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்-அனில் கே சூட்

By

Published : Dec 4, 2019, 11:15 PM IST

சென்னை: Q2 காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 விழுக்காடாக குறைந்த நிலையில் இதனை சரி செய்ய மத்திய அரசு முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், சாதாரண மனிதனின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனவும் ஐஏஎஸ்சிசி நிறுவனத்தின் பேராசிரியர் அனில் கே.சூட் ஈ டிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Dump fiscal deficit target
Dump fiscal deficit target

மத்திய அரசு பொருளாதார மந்த நிலையை குறித்து கவலைப்படாமல், முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என ஐஏஎஸ்சிசி (IASCC) நிறுவனத்தின் பேராசிரியர் அனில் கே சூட் (Anil K Sood) தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார வளர்ச்சி மந்த நிலை இயல்பான ஒன்று என்றும் இதனை சரி செய்ய நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய சாதாரண மனிதனின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்

அதுமட்டுமின்றி, நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகள் கண்டிடாத அளவிற்கு குறைந்துள்ளது. இளம் பொறியாளர்கள் மற்றும் இளம் எம்பிஏ பட்டதாரிகள்கூட நினைத்து பார்க்காத அளவிற்கு மிக குறைந்த சம்பளமே வாங்குகின்றனர். சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைவாகதான் இருக்கும். எனவே, வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு சம்பளத்தை அதிகரித்தல் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தல் கட்டாயமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) அதிகரிக்கும் என கூறினார்.

இதையும் படிங்க: கூகுள் தாய் நிறுவனத்தில் தமிழர் சுந்தர் பிச்சைக்குத் தலைமை பொறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details